ஈஸ்டர் தாக்குதல்களைத் தொடர்ந்து சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்புவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வணிக வகுப்பு இருக்கைக்காக (business class) காத்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.
சிங்கப்பூரிலிருந்து மதியம் 3 மணிக்கும் இரவு 9 மணிக்கும் இரண்டு விமானங்கள் இலங்கைக்கு வந்திருந்த போதும் முன்னாள் ஜனாதிபதி அந்த இரண்டிலும் நாடு திரும்பாமல் சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானத்தில் காலை 12 மணிக்கு புறப்பட்டதாக கூறினார்.
ஜனாதிபதியாக அவர் தனது கடமைகளை தவறவிட்ட நிலையில் அவரை குற்றவாளியாக்குவதற்கு பதிலாக சூத்திரதாரிகளை அரசாங்கம் பிடிக்க வேண்டும் என மைத்ரிபால சிறிசேன குறிப்பிட முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் கருத்து தெரிவித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நாட்டில் தற்போதும் தீவிரவாதிகள் உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.