இந்திய மக்களை புறக்கணித்துவிட்டு தடுப்பூசி ஏற்றுமதியில் மத்திய அரசு ஈடுபடவில்லை என சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 2 மாதங்கள் ஆகும் நிலையில், உள்ளூர் தடுப்பூசி திட்டத்திற்கு போதிய முன்னுரிமை அளிக்காமல், தடுப்பூசி அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக பொதுவான விமர்சனம் எழுந்தது.
இதற்கு மாநிலங்களவையில் பதிலளித்த ஹர்ஷ் வர்தன், “நாட்டிற்கு எவ்வளவு தேவை, வெளிநாடுகளுக்கு எவ்வளவு ஏற்றுமதி செய்வது என்பது குறித்து அரசின் உயர்மட்ட நிபுணர் குழு கண்காணித்து வருகின்றது.
கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னர், பல நாடுகளுக்கு இலவசமாகவும் விலைக்கும் அவற்றை மத்திய அரசு அனுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.