ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஜேர்மனி, பிரான்ஸ், டென்மார்க், தாய்லாந்து மற்றும் நெதர்லாந்து உட்பட பல நாடுகளில் தடுப்பூசிக்கு போட்டுக் கொண்ட பின்னர் சிலருக்கு இரத்த உறைவு பற்றிய அறிக்கைகளைத் தொடர்ந்து அதன் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
இந்த அச்சத்திற்கு மத்தியில் உரையாற்றிய பிரதமர் ட்ரூடோ, ‘ஹெல்த் கனடாவின் செய்தியை மறுபரிசீலனை செய்து, பரிசீலிக்கப்பட்ட தடுப்பூசி தொகுப்புகள் எதுவும் கனடாவுக்கு அனுப்பப்படவில்லை.
நாங்கள் விரைவில் தடுப்பூசி போட அனைவரையும் ஊக்குவிக்கிறோம். எளிமையாகச் சொல்வதானால், உங்களுக்கு வழங்கப்படும் முதல் தடுப்பூசிதான் உங்களுக்கு சிறந்த தடுப்பூசி.
நீங்கள் எடுக்க வேண்டியது இதுதான். ஏனென்றால், இந்த தொற்றுநோயை நாங்கள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் முடிக்கப் போகிறோம்’ என கூறினார்.