கனடாவின் கல்கரி (Calgary) நகரில் உள்ள போனெஸ் பகுதியில் ஏற்பட்ட ஒரு பெரிய குடிநீர் குழாய் வெடிப்பு காரணமாக அப்பகுதியில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த வெள்ளத்தில் சிக்கிய 13 நபர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள பல குடியிருப்புகளுக்கு முன்னெச்சரிக்கையாக தண்ணீரை காய்ச்சி குடிக்குமாறு (Boil water advisory) அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பாதிப்பு கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட மற்றொரு பெரும் குழாய் சேதத்தை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, தற்போது பாதுகாப்பு கருதி அப்பகுதியில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன, மேலும் சேதத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இச்சம்பவத்திற்கான மூலக்காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், நிலைமையை சீராக்க மாநகராட்சி ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.


















