• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/01/01
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த ஆண்டில் நாம் எதிர்கொண்ட சகலவிதமான சவால்களையும் சக்தியாக மாற்றிக்கொண்டு, புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்குமாறு உங்களை அழைக்கின்றேன் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி ஹமரசூரிய தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டின் விடியலில் நாம் நின்றுகொண்டிருக்கும் இவ்வேளையில், கடந்து வந்த 2025ஆம் ஆண்டினை மீளாய்வு செய்வது காலத்தின் தேவையென நான் கருதுகிறேன்.

ஒரு மக்கள் நல அரசாங்கமாக, பல தீர்க்கமான மற்றும் முன்னோடியான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிந்த ஓர் ஆண்டாக 2025 ஆம் ஆண்டினை எண்ணி ஒருபுறம் நாம் மகிழ்ச்சியடைய முடியும்.

புதிய அரசியல் கலாசாரமொன்றின் அடிப்படையில், அரச நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும், ஊழலற்ற வினைத்திறன் மிக்க அரச சேவைக்கான அடித்தளத்தை அமைக்கவும் எம்மால் முடிந்துள்ளதென நான் நம்புகிறேன்.

பொருளாதார ஸ்திரத்தன்மை, சர்வதேச ரீதியாக எமது நாட்டின் மீது கட்டியெழுப்பப்பட்டு வரும் நேர்மறையான கண்ணோட்டம், வெளிப்படைத்தன்மை மிக்க ஆட்சி முறைமை மற்றும் சட்டத்தின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தியமை போன்ற பல பிரதான துறைகளின் ஊடாக 2025 ஆம் ஆண்டைப் பற்றி நாம் திருப்தியடையலாம்.

எவ்வாறாயினும், 2025ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் எதிர்கொள்ள நேர்ந்த துரதிர்ஷ்டவசமான இயற்கை அனர்த்தம், எமது நாட்டிற்குச் சவாலானதொரு காலப்பகுதியாக அமைந்தது.

புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு அவர் விடுத்த வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

அது நம் அனைவரது மனங்களையும் கவலையில் ஆழ்த்திய போதிலும், அத்தகைய இக்கட்டான தருணத்திலும் இலங்கையர்களாக நாட்டு மக்கள் வெளிப்படுத்திய சகோதரத்துவம், மனிதாபிமானம் மற்றும் ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிய விதம் குறித்து இன்று உலகளவில் பேசப்பட்டு வருகின்றது.

அந்தச் சவால்களை வெற்றிகொண்டு, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை ஆற்றி, சீர்குலைந்த அவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் உறுதியான அர்ப்பணிப்புடனேயே 2026 ஆம் ஆண்டிற்குள் நாம் கால்பதிக்கின்றோம்.

கல்வித் துறையில் தரமான, அதேநேரம் நிலையான மாற்றத்தை ஏற்படுத்துகின்ற,கல்வித்துறையின் மாற்றம், அரச சேவை உட்பட அனைத்துத் துறைகளையும் டிஜிட்டல் மயமாக்கல், சாத்தியமான புதிய எண்ணக்கருக்களைக் கொண்ட முயற்சியாளர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் உலகளாவிய ரீதியில் முன்னேறுவதற்கான சூழலை உருவாக்குதல், போதைப்பொருள் அற்ற – சுற்றாடலை நேசிக்கும் – மனிதாபிமானம் மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற பல சிறப்பான நோக்கங்களுடன், இன, மத மற்றும் கட்சிப் பேதங்களற்ற பலமான இலங்கை என்ற அடையாளத்துடன் இந்நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பு அரசாங்கம் உட்பட ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் இருக்கின்றது என்பதை இவ்வேளையில் நினைவூட்ட விரும்புகிறேன்.

கடந்த ஆண்டில் நாம் எதிர்கொண்ட சகலவிதமான சவால்களையும் சக்தியாக மாற்றிக்கொண்டு, புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்குமாறு உங்களை அழைக்கின்றேன்.

உங்கள் அனைவருக்கும் அமைதியும், மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்த வெற்றிகரமான இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

Related

Tags: Harini AmarasuriyaNew Yearஹரிணி ஹமரசூரிய
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மலர்ந்த புத்தாண்டு அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும் – ஜனாதிபதி

Next Post

மாறாத நிலையில் உள்ள இலங்கையின் பணவீக்கம்!

Related Posts

விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!
இலங்கை

விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

2026-05-17
NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!
இலங்கை

NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

2026-05-17
வைத்தியசாலைகளின்  இணையத்தளங்களின் மீது சைபர் தாக்குதல்; அதிர்ச்சியில் மக்கள்
இலங்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பண கொடுக்கல் வாங்கலிலும் ஊடுருவல் !

2026-05-17
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!
இலங்கை

வனவாஸல ரயில் விபத்தின் அதிரடி பின்னணி: 3,000 ரூபாய்க்காக தண்டவாள பாகங்களை விற்ற போதை ஆசாமி !

2026-05-17
கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!
ஆபிாிக்கா

கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

2026-05-17
மல்வானை ‘பசில் ராஜபக்ச’ மாளிகையைச் சுற்றிவளைத்து மாணவர்கள் போராட்டம்!
இலங்கை

பெசிலின் மல்வானை இல்லம் – பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினரால் தொடர்ந்தும் முற்றுகை!

2026-05-17
Next Post
மாறாத நிலையில் உள்ள இலங்கையின் பணவீக்கம்!

மாறாத நிலையில் உள்ள இலங்கையின் பணவீக்கம்!

கடந்த வருடத்தில் 5.6 சதவீதம் வீழ்ச்சி கண்ட ரூபாவின் பெறுமதி!

கடந்த வருடத்தில் 5.6 சதவீதம் வீழ்ச்சி கண்ட ரூபாவின் பெறுமதி!

போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி கைது!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

0
NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

0
வைத்தியசாலைகளின்  இணையத்தளங்களின் மீது சைபர் தாக்குதல்; அதிர்ச்சியில் மக்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பண கொடுக்கல் வாங்கலிலும் ஊடுருவல் !

0
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

வனவாஸல ரயில் விபத்தின் அதிரடி பின்னணி: 3,000 ரூபாய்க்காக தண்டவாள பாகங்களை விற்ற போதை ஆசாமி !

0
கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

0
விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

2026-05-17
NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

2026-05-17
வைத்தியசாலைகளின்  இணையத்தளங்களின் மீது சைபர் தாக்குதல்; அதிர்ச்சியில் மக்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பண கொடுக்கல் வாங்கலிலும் ஊடுருவல் !

2026-05-17
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

வனவாஸல ரயில் விபத்தின் அதிரடி பின்னணி: 3,000 ரூபாய்க்காக தண்டவாள பாகங்களை விற்ற போதை ஆசாமி !

2026-05-17
கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

2026-05-17

Recent News

விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

2026-05-17
NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

2026-05-17
வைத்தியசாலைகளின்  இணையத்தளங்களின் மீது சைபர் தாக்குதல்; அதிர்ச்சியில் மக்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பண கொடுக்கல் வாங்கலிலும் ஊடுருவல் !

2026-05-17
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

வனவாஸல ரயில் விபத்தின் அதிரடி பின்னணி: 3,000 ரூபாய்க்காக தண்டவாள பாகங்களை விற்ற போதை ஆசாமி !

2026-05-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.