வேல்ஸில் உள்ள அனைத்து (தேசிய சுகாதார சேவை) என்.எச்.எஸ் மற்றும் சமூக பராமரிப்பு ஊழியர்களுக்கும் மேலதிக கொடுப்பனவு செலுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
வேல்ஸ் அரசாங்கம் கிட்டத்தட்ட 222,000 பேருக்கு தலா 735 பவுண்டுகள் சமமான தொகையை வழங்குவதாகக் கூறியது. பெரும்பாலானவர்களுக்கு 500 பவுண்டுகள் கிடைக்கும் என்று அர்த்தம்.
இதுகுறித்து சுகாதார அமைச்சர் வாகன் கெதிங் கூறுகையில், ‘இந்த வேலைகளில் பணிபுரிபவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்’ என கூறினார்.
ஆனால் றோயல் காலேஜ் ஒஃப் நர்சிங் ‘கொவிட்-19 மேலதிக கொடுப்பனவு ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் கணிசமான ஊதிய உயர்வு அல்ல’ என்று எச்சரித்தது.
இது சமூக பராமரிப்பு ஊழியர்களுக்கான இரண்டாவது மேலதிக கொடுப்பனவு மற்றும் தேசிய சுகாதார சேவை தொழிலாளர்களுக்கு முதல் மேலதிக கொடுப்பனவு ஆகும்.
இதுகுறித்து ஆர்.சி.என் வேல்ஸின் இயக்குனர் ஹெலன் வைலி, நியாயமான ஊதியத்திற்கு அழைப்பு விடுத்தார். இது செவிலியர்களை தொழிலில் தங்கவும் அதிக ஊழியர்களை ஈர்க்கவும் ஊக்குவிக்கும்.