ஆப்கானிஸ்தானின் காபூலில் அரச ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக ஆப்கானிஸ்தான் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட பேருந்திலேயே இன்று (வியாழக்கிழமை) இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றதாக அமைச்சின் ஆலோசகர் அப்துல் சமத் ஹமீத் போயா தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அரசாங்கம், தலிபான் மற்றும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட முக்கிய நாடுகள் பேச்சுவார்த்தைக்காக மொஸ்கோவில் ஒன்றுகூடியுள்ள நிலையில் இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ள நிலையில் இதற்கு யாரும் உடனடியாகப் பொறுபேற்கவில்லை.
இதேவேளை, அரச ஊழியர்கள், சிவில் சமூகப் பிரமுகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக படுகொலை திட்டங்களை நடத்துவதாக ஆப்கானிஸ்தான் அரசாங்கம் தலிபான்கள் மீது குற்றஞ்சாட்டி வருகிறது. எனினும், தாம் குறித்த செயற்பாடுகளில் ஈடுபடவில்லையென தலிபான்கள் மறுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.