பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பங்களாதேஷ்க்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்டார்.
பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் அழைப்பினை ஏற்று, இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தினை பிரதமர் இன்று மேற்கொண்டுள்ளார்.
பங்களாதேஷில் நடைபெறவுள்ள சுதந்திர தினம் மற்றும் பங்கபந்து செய்க் முஜ்பர் ரஹ்மானின் 100 ஆவது பிறந்த தினம் ஆகிய நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளார்.
இதேவேளை பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனா, பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் அப்துல் அமீன், வெளிவிவார அமைச்சர், பங்களாதேஷ் வங்கி ஆளுநர் ஆகியோரை சந்திந்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இருநாடுகளுக்கு இடையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் ஊடாக வரலாற்று ரீதியிலான தொடர்பு மேலும் வலுவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை அந்நாட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.