உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 27இலட்சத்தும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் உலகளவில் மொத்தமாக கொரோனா வைரஸ் தொற்றினால், 12கோடியே 23இலட்சத்து 67ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர மொத்தமாக இதுவரை ஒன்பது கோடியே 86இலட்சத்து 58ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.
இதற்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நாடுகளாக பிரேஸில், இந்தியா, ரஷ்யா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் உள்ளன.