இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு சீனாவின் சினோபோர்ம் கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது என பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரை இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராசெனகா தடுப்பூசிக்கும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினு தற்போதுவரை இந்தியாவின் சீரம் நிறுவன கொரோனா தடுப்பூசி மட்டுமே மக்கள் பாவனையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.