இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை அண்மிக்கிறது.
கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 349 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 89 ஆயிரத்து 846ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 86 ஆயிரத்து 466 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 835 பேர் தொடர்ந்தும் சிகிச்கைப் பெற்று வருகின்றனர்.
இதேநேரம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
பூவெலிகட பிரதேசத்தைச் சேர்ந்த 85 வயதுடைய ஆணொருவர் கண்டி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், மார்ச் 14ஆம் திகதி உயிரிழந்தார்.
கொரோனா நிமோனியா நிலையே மரணத்திற்கான காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 545ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.