உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெறவுள்ள கும்பமேளா திருவிழாவின் காரணமாக கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், இது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்திலேயே மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடித்தில் ”ஹரித்வாரில் தற்போது நாள் ஒன்றுக்கு 10 முதல் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கும்பமேளா திருவிழாவிற்கு 15 ஆயிரம் கோடி பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் இந்த விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
அத்துடன் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும் சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.