ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த விவாதம் இன்று இடம்பெறவுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டது.
எனினும் சில திட்டமிடல் பிரச்சினைகள் காரணமாக வாக்கெடுப்பை ஒத்திவைக்க ஜெனீவாவில் உள்ள அதிகாரிகள் தீர்மானித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேநேரம், இந்த தீர்மானத்தை ஆதரிக்க பெரும்பாலான நாடுகள் முடிவு செய்துள்ளதால், வாக்களிப்பு இலங்கைக்கு எதிராக முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.