நான் இல்லாத நேரத்தில் எனது பணியை சதுர தொடருவாரென முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன ஆகியோர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகி, நேற்று (திங்கட்கிழமை) வாக்குமூலம் அளித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் இருந்து வெளியேறியதன் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பாக கருத்து தெரிவிக்கவும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சுஜீவ கமகே, (வயது 62) குழுவொன்றினால் கடத்தப்பட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பிலேயே இருவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.