தேசிய நெடுஞ்சாலை துறைக்கு 814 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
லோக்கசபாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ விவசாயிகளின் போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் திறந்துவிடப்பட்டன. இதனால் அரசிற்கு கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி வரையிம் 814 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவை பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மட்டும் ஏற்பட்டவையாகும்.
எனவே மேற்படி மாநிலங்களில் மீண்டும் சுங்கச்சாவடிகளை அமைக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.