இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 251 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் பதிவாகின மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 765 ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 248 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 87 ஆயிரத்து 306 ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 907 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்றினால் நாட்டில் மேலுமொரு மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் – நல்லூரைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.
சுவாசக் கோளாறு, இருமல், வயிற்றோட்டம், மற்றும் கொரோனா நிமோனியா என்பன அவரது மரணத்திற்கான காரணமென கூறப்படுகிறது.
இதனையடுத்து, இலங்கையில் இதுவரை பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 552 பேர் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.