அணுகுண்டின் மேல் அமர்ந்திருப்பதும், அணு உலைக்கு அருகில் குடியிருப்பதும் ஒன்றுதான் என நாம் தமிழர் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், கல்பாக்கம் அணு உலை காரணமாக 14 கிராமங்களில் பத்திர பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சுமார் 2 அரை ஆண்டுகளுக்கு மேலாக அணு உலைக்கு எதிராக போராடி வருவதாகவும், இதற்காக இதுவரை 700 இற்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மத்திய அரசு எல்லாவற்றையும் தனியார் மயமாக்கி வருவதாக தெரிவித்த அவர், தமிழக மக்கள் முதல் அமைச்சர்களை தேர்வு செய்வதில்லை எனவும் அவர் சாடினார்.