பிரேஸிலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரேஸிலில் மூன்று இலட்சத்து ஆயிரத்து 87பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட இரண்டாவது நாடாக விளங்கும் பிரேஸிலில், இதுவரை ஒரு கோடியே 22இலட்சத்து 27ஆயிரத்து 179பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 90ஆயிரத்து 564பேர் பாதிக்கப்பட்டதோடு இரண்டாயிரத்து 244பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 12இலட்சத்து 36ஆயிரத்து 446பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் எட்டாயிரத்து 318பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 10கோடியே ஆறு இலட்சத்து 89ஆயிரத்து 646பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.