ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்பெயினில் இதுவரை 30இலட்சத்து 670பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட எட்டாவது நாடாக விளங்கும் ஸ்பெயினில், இதுவரை 32இலட்சத்து 41ஆயிரத்து 345பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 74ஆயிரத்து 64பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஏழாயிரத்து 026பேர் பாதிக்கப்பட்டதோடு 320பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 66ஆயிரத்து 611பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 855பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.