கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 050பேர் பாதிக்கப்பட்டதோடு 24பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஒன்பது இலட்சத்து 46ஆயிரத்து 370பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 22ஆயிரத்து 759பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 37ஆயிரத்து 099பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 586பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இதுவரை எட்டு இலட்சத்து 86ஆயிரத்து 512பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.