பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஐந்தாயிரத்து 605பேர் பாதிக்கப்பட்டதோடு 98பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை 43இலட்சத்து 12ஆயிரத்து 908பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு இலட்சத்து 26ஆயிரத்து 382பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நான்கு இலட்சத்து 57ஆயிரத்து 371பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 711பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 37இலட்சத்து 29ஆயிரத்து 155பேர் பூரண குணமடைந்துள்ளனர்.