மோசடியில் ஈடுபட்ட அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் தண்டனை வழங்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக சீனி மற்றும் எண்ணெய் இறக்குமதியில் இடம்பெற்றுள்ள மோசடியுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.















