ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளது.
இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா இடைநிறுத்தியுள்ள நிலையில், இலங்கையின் கொள்வனவு பாதிக்கப்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையினால் இந்தியாவிடம் இருந்து பத்து இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன்காரணமாக, முன்பதிவு செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இலங்கைக்குக் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசிகளின் அனைத்து ஏற்றுமதிகளையும் இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் எதிர்காலத்தில், தடுப்பூசிக்கான உள்நாட்டுத் தேவைகள் அதிகரிக்கலாம் என்ற நிலையில் இவ்வாறு ஏற்றுமதி இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.