குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (வெள்ளிக்கிழமை) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்போது குடியரசு தலைவருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் அவரை கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.