கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்தாலும் ஒருபோதும் டெல்லியில் ஊரடங்கு அமுல்படுத்தப்படமாட்டாதென சுகாதாரத் துறை அமைச்சர் சத்தியேந்தர் ஜெயின் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றின் நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் ஒவ்வொரு நாளும், 85 ஆயிரம் முதல் 90 ஆயிரம் கொரோனா சோதனைகள் டெல்லியில் நடத்தப்படுகின்றது எனவும் அமைச்சர் சத்தியேந்தர் ஜெயின் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் மக்கள் அனைவரும், எந்தவித முன்பதிவுகளும் இன்றி தடுப்பூசியினை செலுத்திக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வது தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அமைச்சர் சத்தியேந்தர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவ ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதுடன் 80 சதவீத படுக்கைகள் காலியாக இருக்கின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.