எல்லைகளுக்குள் பயணக் கட்டுப்பாடுகளை நீக்கிய முதல் பிரித்தானிய நாடு என்ற பெருமையை வேல்ஸ் பெற்றுள்ளது.
நாட்டிற்குள் வரம்பற்ற பயணத்திற்கு ஆதரவாக சனிக்கிழமை முதல் ‘ஸ்டே லோக்கல்’ விதி இரத்து செய்யப்பட்டுள்ளது.
வேல்ஷ் அரசாங்கத்தின் மறுஆய்வு வரை வேல்ஸுக்கு வெளியே பயணம் அனுமதிக்கப்படாது. இது ஏப்ரல் 12ஆம் திகதி முதல் அனுமதிக்கப்படும்.
சுய தங்குமிட வசதிகளை வழங்கும் சுற்றுலா நடத்துநர்கள் நீண்ட முடக்கநிலைக்குப் பிறகு ஒரு பிஸியான வார இறுதியை எதிர்கொள்ளவுள்ளனர்.
அத்துடன் இதன்மூலம் இரண்டு வீடுகளைச் சேர்ந்த ஆறு பேர் வெளியில் சந்திக்க முடிகிறது. இது தற்போதைய நான்கு நபர்களின் வரம்பிலிருந்து அதிகரித்துள்ளது.
18 வயதிற்குட்பட்டவர்களுக்கான ஒழுங்கமைக்கப்பட்ட வெளிப்புற நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டுக்கள் மீண்டும் தொடங்கலாம் மற்றும் நூலகங்கள் மற்றும் காப்பகங்கள் அவற்றின் கதவுகளை மீண்டும் திறக்க முடியும்.
சில வரலாற்று இடங்கள் மற்றும் தோட்டங்களின் வெளிப்புற பகுதிகளை மட்டுப்படுத்தவும் விதிகள் அனுமதிக்கின்றன.
வீதிகள் மற்றும் அழகு இடங்கள் பிஸியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேல்ஸ் முழுவதும் உள்ள பொலிஸ் படைகள், மக்களை ‘தங்கள் பங்கை வகிக்கவும், அரசாங்க விதிமுறைகளை பின்பற்றவும்’ வலியுறுத்துகின்றன.