ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக தடுப்பூசிகளை வழங்க எத்தனை கோவிட் தடுப்பூசிகள் தயாரிக்கிறன என்பதை தெளிவுபடுத்தவுமாறு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார்.
கோவக்ஸ் திட்டத்தின் மூலம் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்க பிரித்தானியா திட்டமிடப்பட்டுள்ளது.
400 மில்லியன் தடுப்பூசிகளை முன்பதிவு செய்துள்ள பிரித்தானியா, மிச்சப்படுத்தும், தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக வழங்குவதாக கூறியுள்ளது.
கோவாக்ஸ் திட்டத்தின் மூலம் முதல் தடுப்பூசிகளைப் பெறும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் ஆப்கானிஸ்தான், ஹைட்டி, கொங்கோ, எத்தியோப்பியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் அடங்கும்.
பிரித்தானியாவில் இதுவரை 29 பேர் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.