பாடசாலைகளை மூடுவதன் மூலம் மட்டுமே பாடசாலைகளில், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று சங்கிலியை அறுக்க முடியும் என தேசியப் பேரணிக் கட்சியின் தலைவி மரின் லூப்பன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனாத் தொற்றினால் ஒவ்வொரு, வகுப்புகளாக, ஒவ்வொரு பாடசாலைகளாக மூடிக்கொண்டிருப்பதை விட, பாடசாலைகளை மூடுவதன் மூலமே, பாடசாலைகளில் கொரோனாத் தொற்றுச் சங்கிலியை அறுக்க முடியும்.
நாங்கள் ஒவ்வொரு வகுப்பாக மூடுவோம், பாடசாலை, பாடசாலையாக மூடுவோம் என்று கூறியிருப்பது பொறுத்தமற்றது. மேலும் தொற்றுக்களை மாணவர்களிடையே ஏற்பட விடாமல் உடனடியாகப் பாடசாலைகளை மூடவேண்டும்’ என கூறினார்.
இதனிடையே, ஸ்ரார்ஸ்பேர்க்கின் பிராந்தியத்தில் அல்சாஸ் வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், சுகாதார நிலைமைகள் குறித்து அரசாங்கம் எந்நேரமும் விழிப்புடன் இருக்கின்றது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.