பொலிஸ் மற்றும் தீயணைப்புத் துறையில் பணியாற்றும் நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு ஓய்வூதியம் வழங்க போலந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இயற்கை பேரிடர் காலங்களில் மீட்புப் பணி, வெடிகுண்டு அகற்றுதல், தேடுதல் பணி எனப் பல உதவிகளைக் புரிந்துவரும் விலங்குகள், அரச வேலையில் இருந்து வெளியேறிய பிறகு அவற்றின் எதிர்காலத்தை சிந்தித்து இந்த தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளது.
இதுகுறித்து போலந்து உட்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசாங்கம் வேலை செய்யும் விலங்குகளால் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. மேலும் பல குற்றங்கள் கண்டறியப்படுகின்றன. ஆகையால் அந்த விலங்குகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த சட்டத்தை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் வழங்கும் ஓய்வூதிய தொகை, சேவை காலங்களில் கடினமாக உழைக்கும் இந்த விலங்குகளுக்கு, ஓய்வு பெற்றபின் பராமரிப்பு மற்றும் மருத்துவத்துக்கு செலவிடப்படும்.