கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான எதிர்புடலை அடையாளம் காணும் இலகுவான பரிசோதனை முறையினை பேராசிரியர் நீலிகா மாலவிகே உள்ளிட்ட ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக நிபுணர் குழுவினர் கண்டுப்பிடித்துள்ளனர்.
குறித்த பரிசோதனைக்கு விரல் நுனியில் இருந்து எடுக்கப்படும் ஒரு சொட்டு இரத்தம் போதுமானதாக இருக்குமென நிபுணர் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றினை கண்டவது குறித்து முன்னெடுக்கப்படும் ஏனைய பரிசோதனை முறைமையை விட இது மிகவும் இலகுவானதொன்று எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த ஆய்வினை மேற்கொள்வதற்கு சுமார் 3,000 குருதி மாதிரிகள் பெறப்பட்டதாக ஆய்வில் பங்கேற்றிருந்த ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் மருத்துவத்துறை பேராசிரியர் நீலிகா மலவிகே, தனது ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆய்வில் இந்தியா, பிரான்ஸ், தாய்வான், பிரித்தானியா, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.