தமிழகத்திற்கு தேவையான 10 இலட்சம் கொவிஷீல்ட் தடுப்பூசிகள் எதிர்வரும் 2 ஆம் திகதி கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டொக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொவிஷீல்ட் தடுப்பூசியை விநியோகம் செய்வதற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், ‘மத்திய அரசிடமிருந்து இதுவரை 39 இலட்சம் தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 34 இலட்சம் தடுப்பூசிகள் கொவிஷீல்ட் தடுப்பூசிகளாகும்.
28 இலட்சம் தடுப்பூசிகள் தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 10 முதல் 20 தடுப்பூசிகள் உரிய பயனாளிகளுக்கு செலுத்த முடியாததால் வீணாகியுள்ளன.
மேலும் அடுத்த 10 நாட்களுக்கு தேவையான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. மேலும் ஒரு தொகுதி தடுப்பூசிகள் எதிர்வரும் 2 ஆம் திகதி தமிழகத்திற்கு கொண்டுவரப்படவுள்ளன’ எனத் தெரிவித்துள்ளார்.