பங்களாதேஷில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பங்களாதேஷில் ஆறு இலட்சத்து 895பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 33ஆவது நாடாக விளங்கும் பங்களாதேஷில் இதுவரை மொத்தமாக எட்டாயிரத்து 949பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஐந்தாயிரத்து 181பேர் பாதிக்கப்பட்டதோடு 45பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 54ஆயிரத்து 228பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் வைரஸ் தொற்றிலிருந்து ஐந்து இலட்சத்து 37ஆயிரத்து 718பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.