பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) புதுச்சேரிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதன்காரணமாக குறித்த பகுதியில் 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தடை உத்தரவு நாளையும் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின்போது பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார். பிரதமரின் வருகையை முன்னிட்டு ட்ரோன்கள், ஆளில்லா குட்டி விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி உத்தரவுகளை மீறுபவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.