பிரேஸில் வெளியுறவுத்துறை அமைச்சர் எர்னஸ்டோ அரோஜோ, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரேஸிலுக்கு தடுப்பூசிகளைப் பெறுவதில் எர்னஸ்டோ அராஜோ இராஜாங்க முறையில் தோல்வி அடைந்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்ததையடுத்து அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கு பொறுப்பேற்று எர்னஸ்டோ அரோஜா தனது பதவியை துறந்துள்ளார். எனினும், இராஜினாமா குறித்து உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் நெருக்கமான நட்புறவு மற்றும் சீனாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது ஆகிய காரணங்களால் பிரேஸில் போதிய அளவு தடுப்பூசிகளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.
உலக அளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் அதிக பாதிப்பினை எதிர்கொண்டுள்ள இரண்டாவது நாடாக விளங்கும் பிரேஸிலில், இதுவரை ஒரு கோடியே 25இலட்சத்து 77ஆயிரத்து 354பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று இலட்சத்து 14ஆயிரத்து 268பேர் உயிரிழந்துள்ளனர்.