கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப்பரவல் தீவிரமடைந்ததன் காரணமாக, பிரான்ஸில் மூன்றாவது முறையாக நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போது 19 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு, எதிர்வரும் சனிக்கிழமை முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் எனவும் கல்வி நிலையங்கள் மூன்று வாரங்களுக்கு மூடப்படுவதாக ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இரவு 7 மணிமுதல் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும். வேலைகளில் (அலுவலக வேலை, வீட்டில் இருந்து வேலை என பிரித்து வகைப்படுத்தப்படும்.
தற்போது 19 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளது போன்று நாடு முழுவதும் உள்ள அனைத்து கடைகளும் மூடப்படும்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘தற்போது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாம் கட்டுப்பாட்டை இழந்து விடுவோம். தடுப்பூசி போடுவதே சிறந்த தீர்வாக இருக்கும்.
மே மாத நடுப்பகுதியிலிருந்து, நாடு மீண்டும் வழமைக்குதத் திரும்பும். முதலில் மே மாத நடுப்பகுதியில் இருந்து தற்போது மூடப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள், வர்த்தக மையங்கள் என்பன திறக்கப்படும்.
அதன் பின்னர் உணவகங்கள், மதுச்சாலைகள், அருந்தகங்கள் என்பனவற்றைத் திறப்பதற்கான கால அட்டவணை தரப்படும்.
அனைத்து ஆரம்ப பாடசாலைகள், பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்தும் அடுத்த மூன்று வாரங்களுக்கு மூடப்படும்.
ஏப்ரல் 26ஆம் திகதியே மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும். உயர்கல்வி பாடசாலைகள் மே மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகும் என கூறினார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் படி, பகல் நேரத்தில் மக்கள் 10 கி.மீட்டர் சுற்றளவு மட்டுமே செல்ல முடியும். அதற்கு மேல் செல்ல வேண்டும் என்றால் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.