விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் மனிதர்களிடத்தில் மட்டுமன்றி விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையிலேயே விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் விலங்குகளின் ஆரோக்கியத்துக்கான மத்திய ஆணையம் உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசிக்கு கார்னிவாக்-கோவ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள ரஷ்ய அரசின் மூத்த அதிகாரி ஒருவர், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடங்கிய கார்னிவாக்-கோவ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளில் நாய், பூனை, நரிகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டன.
இந்த சோதனை முடிவுகளில் தடுப்பூசி பாதிப்பில்லாதது என்பதை உறுதி செய்ததோடு, அது விலங்குகளுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது என்பதையும் வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்கா, கனடா, போலாந்து, அவுஸ்ரேலியா, கிரீஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மருந்து நிறுவனங்கள் கார்னிவாக்-கோவ் தடுப்பூசியை வாங்குவதில் ஆர்வம் காட்டியுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இந்த மாதம் தடுப்பூசிகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படலாம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.