புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்தவர்களை தண்டிப்பது அல்லது சட்ட நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பல்ல என போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நச்சு தேங்காய் எண்ணெய் விவகாரத்தை ஆராய்ந்து, இறக்குமதியாளர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுப்பது இலங்கை சுங்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிலையத்தின் கடமையாகும் எனவும் காமினி லொகுகே சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விவகாரத்தில் அரசாங்கத்தின் தலையீடு எதுவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டு மக்கள், தங்கள் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவது, அவர்களது வாழ்க்கையை வளமாக்குவார்கள் என்ற நம்பிக்கையிலாகும் எனவும் காமினி லொகுகே கூறியுள்ளார்.