சீனா நன்கொடை அளித்த சினோபோர்ம் தடுப்பூசிகள் அடுத்த வாரம் முதல் கொழும்பு, கண்டி, ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளத்தில் ஆகிய சீனர்களுக்கு வழங்கப்படும் என தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சின் நிபுணர் குழுவின் பரிந்துரையின் படி இலங்கையர்களுக்கு சினோபோர்ம் தடுப்பூசி (அங்கீகாரம் வழங்கப்படவில்லை) வழங்குவதற்கான செயன்முறை தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், 7 மில்லியன் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகளை வாங்க அரச மருந்துக் கூட்டுத்தாபனத்திற்கும் ரஷ்யாவின் நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
இலங்கையில் அவசரகால பயன்பட்டிருக்காக சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசிக்கு இன்னும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.