மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நாளை (சனிக்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 12 மணிநேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகள் இன்றி மக்கள் வெளியில் வரவேண்டாம் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஏழு நாட்களுக்கு நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும், இதனையடுத்தே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரக் குழுவையும், மத்திய அரசு அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.