வடக்கு அயர்லாந்தில் ஈஸ்டர் விடுமுறைக்குப் பிறகு நேருக்கு நேர் கற்பித்தல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஆரம்ப மற்றும் பிந்தைய தொடக்கப் பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் ஈஸ்டர் விடுமுறைக்குப் பிறகு பாடசாலைக்குத் திரும்புவார்கள்.
நேற்று (வியாழக்கிழமை )பிற்பகல் ஒரு அறிக்கையில், நேருக்கு நேர் கற்பித்தல் ஏப்ரல் 12ஆம் திகதி முதல் மீண்டும் தொடங்கும் என்று கல்வித் துறை உறுதிப்படுத்தியது.
வியாழக்கிழமை ஒப்புக் கொள்ளப்பட்ட பல புதிய முடக்கநிலை தளர்த்தல் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.
அதே திகதியிலிருந்து சில வெளிப்புற அத்தியாவசிய சில்லறை விற்பனையை மீண்டும் திறக்க வடக்கு அயர்லாந்து அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில், திருமணங்கள், ஒரே பாலின திருமணம் மற்றும் இறுதி சடங்குகளில் 25 பேரின் வரம்பும் ஏப்ரல் 12ஆம் திகதி முதல் நீக்கப்படும்.