தற்போதைய அரசாங்கத்தினால் ரூபாயின் பெறுமதியையும் நாட்டையும் கட்டுப்படுத்த முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதியைக் குறைப்பதன் ஊடாக நாட்டின் நிலைமையைப் புரிந்து கொள்ள முடிகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
அதாவது, சிம்பாப்வேயின் நிலைக்குள் படிப்படியாக நாடு நகர்கிறது எனவும் சஜித் பிரேமதாச கவலை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை ரூபாயின் பெறுமதி குறைவது குறித்து அரசாங்கம் ஏற்கனவே கவலை கொண்டுள்ளது என நிதி, மூலதன சந்தைகள் மற்றும் பொது நிறுவன சீர்திருத்தங்கள் துறை அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது ஒரு தற்காலிக சம்பவம் என்றும், எதிர்காலத்தில் ரூபாயை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.