இந்தோனேசியாவின் பிரதான தீவான ஜாவா கடல் பகுதியில் சரக்குக் கப்பலுடன் மீன்பிடிப் படகு மோதிய விபத்தில் 17பேர் காணாமல் போயுள்ளனர்.
அத்துடன், மீன்பிடிப் படகில் பயணித்த 15பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதுடன், காணாமல்போன 17பேரைத் தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் சிக்கிய கப்பல் மற்றும் படகு ஆகியன இந்தோனிசியர்களுடையது என்பதுடன், குறித்த சரக்குக் கப்பல் 30 ஆயிரம் தொன் கொள்ளளவு கொண்ட சரக்குகளுடன் படகு மீது மோதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.