த்ரிஷா நடிப்பில் உருவாகி, நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த ‘பரமபதம் விளையாட்டு’ திரைப்படத்தை பண்டிகை தினத்தன்று நேரடியாக ஓடிடியில் வெளியிடவுள்ளனர்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தை திருஞானம் இயக்கியுள்ளார். நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கொரோனா காரணமாக சுமார் ஓராண்டாக வெளியாமல் இருந்த இப்படத்தை தற்போது நேரடியாக ஓடிடியில் வெளியிடவுள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.
அதன்படி, நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த படத்தை பண்டிகை தினத்தன்று நேரடியாக ஓடிடியில் வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் திகதி தமிழ் புத்தாண்டன்று ‘பரமபதம் விளையாட்டு’ படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


















