பல்கேரியாவில் நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகின்ற நிலையில் புதிய நாடாளுமன்றத்திற்கு மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
உள்ளூர் நேரப்படி, இன்று காலை ஏழு மணிக்குத் தொடங்கியுள்ள வாக்குப்பதிவு, இரவு எட்டு மணிக்கு நிறைவடையவுள்ளது.
பல மாதங்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளமைக்கு மத்தியில் 12 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் பல்கேரியர்கள் வாக்களித்து வருகின்றனர்.
மேலும், 240 உறுப்பினர்களைத் தெரிந்தெடுக்கும் இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 6.7 மில்லியன் மக்கள் தகுதிபெற்றுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாகவும் ஏழ்மையான நாடாகவும் உள்ள பல்கேரியாவில், ஊழல் நிரம்பிய ஆட்சி இடம்பெறுவதாக தொடர்ச்சியாக மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில், பிரதமர் பொய்கோ பொரிசோவ் (Boyko Borissov ) மீதான வாக்கெடுப்பாக இந்தத் தேர்தல் பார்க்கப்படுகிறது.