இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு இலட்சத்து 3 ஆயிரத்து 793 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
இதனையடுத்து தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 25 இலட்சத்து 87 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் ஒரு கோடியே 16 இலட்சத்து 79 ஆயிரத்து 958 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அத்துடன் 7 இலட்சத்து 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் 477 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 65 ஆயிரத்து 132 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.