வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் ஒரு போதும் வீண்போகாது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அரியானா மாநிலத்தில் நடைபெற்ற மகா பஞ்சாயத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்தால் எங்களை தண்டிக்க ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரம் தராமல் ஆளுநருக்கு அதிக அதிகாரங்கள் தரப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். ஆளுநருக்கு கூடுதல் அதிகாரமளிக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு அதற்கான ஒப்புதலை ஜனாதிபதி வழங்கியுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும் விவசாயிகளின் போராட்டத்தில் 300 பேர் உயிரிழந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர் அவர்களின் தியாகங்களுக்கு வணக்கம் செலுத்துவதாகவும், விவசாயிகளின் போராட்டம் வீண்போகாவது எனவும் தெரிவித்தார்.