இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி திரையரங்குகள், வணிக வளாகங்களை மூடுவதற்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் பாடசாலைகள், உணவகங்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கும் பல்வவேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் இரவு 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊரடங்கு விதிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் வெளிமாநிலங்களில் இருந்து ராஜஸ்தான் வருபவர்களும், வெளியே பயணம் செய்பவர்களும் கொரோனா பரிசோதனைகளை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.