உலகில் மர்மமான நாடாக விளங்கும் வடகொரியா, டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளது.
ஜப்பானில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் காரணமாக வடகொரியா இந்த முடிவினை எடுத்துள்ளது.
கடந்த மார்ச் 25ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வடகொரியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு இல்லாததால் தங்களது விளையாட்டு வீரர்களின் நலனை முன்னிட்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜப்பானில் நடக்கவிருந்த ஒலிம்பிக் தொடர், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கமைய ஒலிம்பிக் தொடர், எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 8ஆம் திகதி வரையும் பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஒகஸ்ட் 24ஆம் திகதி முதல் செப்டம்பர் 5ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளன.
விளையாட்டு உலகின் மிகப்பெரிய போட்டித் தொடராhக கருதப்படும் ஒலிம்பிக் தொடர், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.