தமிழக சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மூன்று மணி நிலைவரப்படி 53. 35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
கடந்த முறை இடம்பெற்ற தேர்தலை விட இம்முறை வாக்களிப்பு விகிதம் குறைவாக இருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கபட்டுள்ள 8 ஆயிரத்து 991 பேரில் 17 பேர் மாத்திரமே வாக்களிக்க விரும்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் ஒருசில இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான சம்பவங்கள் வாக்களிப்பு விகிதம் குறைவுக்கு காரணமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.