சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு பரிசளிக்கப்பட்ட கப்பலிலுள்ள தொழிநுட்ப கோளாறுகளை பழுதுபார்ப்பதற்கு தொழிநுட்பவியலாளர்கள் குழுவொன்று அண்மையில் அந்நாட்டிலிருந்து வருகை தந்திருந்தது.
இலங்கைக்கு சீனா பரிசளித்த கப்பல் முழுமையாக இயங்குவதாக இலங்கை கடற்படை அறிவித்திருந்தது. ஆனாலும் போர் கப்பல், பல தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்கிறதென தகவல் வெளியாகியிருந்தன.
053H2G வகை போர் கப்பலான பி -625யை சீனா இலங்கைக்கு பரிசாக வழங்கியது. கடந்த ஆண்டு எஸ்.எல்.என்.எஸ் பரக்கிரமபாகு என்ற பெயரில் கப்பல் இயக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இலங்கை கடற்படை கப்பலுடன் பல செயற்பாட்டு சிக்கல்களை இந்த கப்பல் எதிர்கொண்டுள்ளது எனவும் அது பயன்படுத்தப்படவில்லை எனவும் பலத்த ஊகங்கள் எழுந்தன.
இந்நிலையிலேயே கப்பலிலுள்ள சில தொழிநுட்ப கோளாறுகளை சீர்செய்ய சீன குழுவொன்று சமீபத்தில் இலங்கைக்கு வருகை தந்ததாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக டெய்லி மிரருக்கு கடற்படை செய்தித் தொடர்பாளர் கேப்டன் இந்திகா டி சில்வா தெரிவித்துள்ளதாவது, “கப்பலில் எந்த பிரச்சினையும் இல்லை.
மேலும் கப்பலில் பராமரிப்பு மேற்கொள்ள சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக குறித்த குழு இலங்கைக்கு வந்திருந்தது.
கப்பலில் வழக்கமான பராமரிப்பைத் தவிர்த்து, கப்பலின் சில பழுதுபார்ப்புகளில் சீனக் குழு ஈடுபட்டிருந்தது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.